300 அடி குழிக்குள் விழுந்த சிறுவன் மீட்பு! அசத்தலான மீட்புப் பணி!

15 November 2019 அரசியல்
borewellrescue.jpg

மஹாராஷ்டிரா மாநிலத்தில், 300 அடி குழிக்குள் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்க்கப்பட்டான்.

கடந்த மாதம், திருச்சியில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயதுடைய சுர்ஜித் என்ற சிறுவனை 80 மணி நேரமாகப் போராடியும் மீட்க முடியாமல் போனது. இதனையடுத்து, நாடு முழுவதும் பெரிய அளவில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில், ஆழ்துளைக் கிணறுகளை மூட, நீதிமன்றம் கூறியது. அரசாங்கமும், அதனை வலியுறுத்தியது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வான் என்ற கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன், சுமார் 300 அடி ஆழமுள்ள குழிக்குள் விழுந்துவிட்டான். இந்தத் தகவலை அறிந்த மீட்புத் துறையினர், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின், குழிக்குள் விழுந்த குழந்தையினைப் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவன், அப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனுக்குத் தொடர்ந்து, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவன் நலமுடன் இருப்பதாக அறிவித்தனர். இச்சம்பவம் தற்பொழுது, பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS