40000 போர் வீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ள சீனா! இந்தியா அதிரடியாக செய்த காரியம்!

23 July 2020 அரசியல்
ladakhlatest.jpg

லடாக் எல்லையில் பின் வாங்கியதாக கூறி வந்த சீனா, தற்பொழுது 40,000 போர் வீரர்களை நிறுத்தி உள்ளது அம்பலமாகி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் எல்லைப் பகுதியில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு இருந்தது. இரு நாட்டு இராணுவமும், தங்களுடையப் படைகளை, அப்பகுதியில் குவித்த வண்ணம் இருந்தனர். இந்த சூழ்நிலையில், இரண்டு நாட்டு இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள், பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், இரண்டு நாட்டு இராணுவ வீரர்களையும் பின் வாங்கிக் கொள்ளவதாக இராணுவ அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்டுப் படைப் பிரிவுகளும் அப்பகுதியில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சீன இராணுவம் தன்னுடைய படை வீரர்களை, லடாக் பகுதியில் நிலை நிறுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, சீன பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய, இந்தியா பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல், இரு நாடுகளும் தங்களுடைய படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும், தங்களுடையப் பழைய இடங்களுக்கேச் செல்ல வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதற்கு, அந்த நாடும் சம்மதித்தது. இந்நிலையில், கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான வீரர்கள் லடாக் பகுதியில் சீன இராணுவம் குவித்துள்ளது.

மேலும், ஆர்டிலரி ஆயுதங்கள், கனரக வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள், வான்வெளி பாதுகாப்பு ஆயுதங்கள், ரேடார்கள் உள்ளிட்டவைகளையும் சீனா அங்கு நிலைநிறுத்தி உள்ளது. இதனால், இரண்டு நாடுகளுக்கு இடையிலும், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.

HOT NEWS