சீனாவில் மீண்டும் கொரோனா! போர்க்கால நிலையினை பிரகடப்படுத்தியது அரசு!

20 July 2020 அரசியல்
vaccination1.jpg

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதால், போர்கால வேகத்தில் செயல்பட அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில், ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்பொழுது உலகம் முழுக்க ஒன்றரைக் கோடி பேருக்கு, இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர்.

80 லட்சத்திற்கும் அதிகமானோர், இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர். சீனாவில் இருந்து இந்த வைரஸ் பரவினாலும், சீனாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, வெறும் 83,000 மட்டுமே. அதே போல், இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது வெறும் 4,600 மட்டுமே. இந்த சூழ்நிலையில், பல நாடுகள் சீனாவின் சந்தேகத்தினையும், கோபத்தினையும் வெளிப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கவலைத் தெரிவித்து இருந்தனர். தற்பொழுது சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில், புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. அங்கு 49 நபர்களுக்கு புதிய தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கம் போர்க்கால அவசர நிலையினை அம்மாகாணம் முழுவதும் பிரகடனப்படுத்தி உள்ளது.

இதனால், அம்மாகணத்தில் உள்ள பொதுமக்களிடம் இந்த வைரஸ் தொற்று இருக்கின்றதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நோய் தொற்றினைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் தேவையான முயற்சிகளில் அம்மாகாண அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது.

HOT NEWS