சீனாவில் இந்திய வலைதளங்களுக்குத் தடை! சீன அதிபர் அதிரடி!

30 June 2020 அரசியல்
xi-jinping.jpg

சீனாவில் இந்திய வலைதளங்களுக்கு சீன அதிபர் தடை விதித்துள்ள சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது கடும் மோதல் வெடித்துள்ளது. இதனால், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் கடுமையாகப் பேசி வருகின்றனர். இந்திய ஊடகங்களும், வலைதளங்களும் சீனாவின் அத்துமீறலைத் தோலுறித்துக் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், சீன இராணுவம் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால், இந்தியாவில் உள்ள தொலைக்காட்சிகளில் சீனப் பொருட்களை மக்கள் போட்டு உடைக்கும் காட்சிகள், தடை செய்ய நடைபெற்ற போராட்டங்கள் உள்ளிட்டவைகள் காட்டப்பட்டன. பல லட்சம் வலைதளங்களில், இது பற்றிய செய்திகளும் வெளியாகின. இதனால், சீன மக்களுக்கு சீன இராணுவத்தின் நிலைமைப் பற்றித் தெரிய ஆரம்பித்தது.

இதன் காரணமாக, இந்தியாவின் டிவி சேனல்களுக்கும், வலைதளங்களுக்கும் தற்பொழுது சீன அதிபர் தடை விதித்துள்ளார். இது, இந்தியாவினைப் பழி வாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது. முன்னதாக ஜூன் 29ம் தேதி அன்று, இந்திய அரசாங்கம் சீனாவின் 59 ஆப்களுக்கு தடை விதித்தது. இதனால், சீன அதிபர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்.

சீனாவில் இவைகளுக்கு மட்டுமின்றி, சிஎன்என் மற்றும் பிபிசி உள்ளிட்ட சேனல்களும் அவ்வப்பொழுது இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. எப்பொழுதெல்லாம் ஹாங்காங் பற்றி செய்திகள் வெளியாகின்றனவோ, அப்பொழுதெல்லாம் இந்த சேனல்களும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. எக்ஸ்ப்ரஸ் விபிஎன் என்ற விபிஎன் வசதியினை, சீனாவின் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தற்பொழுது கடந்த 2 நாட்களாக செயல்படவில்லை.

HOT NEWS