அமெரிக்கா விலகல்! வம்பிழுக்கும் சீனா! மாட்டிக் கொண்ட WHO!

10 July 2020 அரசியல்
zhaolijian.jpg

தற்பொழுது உலக சுகாதார மையத்தில் இருந்து, அமெரிக்கா விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை சீனா எதிர்த்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸானது பரவ ஆரம்பித்தது. தற்பொழுது உலகம் முழுக்கப் பரவியுள்ள இந்த வைரஸால், உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பின் மீது, அமெரிக்க அரசும் மற்றும் அதிபர் டிரம்பும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

சீனா தான் திட்டமிட்டு, இந்த வைரஸைப் பரப்பியுள்ளது எனவும், உலக சுகாதார மையமானது, சீனாவின் கைப்பாவையாக மாறிவிட்டது எனவும் புகார் கூறியது. இதனை சீனாவும், உலக சுகாதார அமைப்பும் மறுத்தன. இருப்பினும், நேற்று உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாகவும், அதற்கு வழங்கும் நிதியினை நிறுத்திக் கொள்வதாகவும் கடிதம் அளித்தது.

இது குறித்து இன்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், சாவோ லிஜியன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், அமெரிக்காவின் இந்த செயல், ஒப்பந்தங்களை மீறுவது, ஒருதலைப்பட்சமாக நடப்பது மற்றும் அணிகளிடமிருந்து பிரிப்பது உள்ளிட்டவைகளை வெளிப்படையாகக் காட்டியுள்ளது.

உலகமே இக்கட்டான சூழ்நிலையில் பரிதவிக்கும் பொழுது, அமெரிக்கா இவ்வாறு செய்வது உலகின் ஏழை நாடுகளை கடுமையாகப் பாதிக்கும். மேலும், உலக சுகாதார அமைப்பானது, சர்வதேச சுதந்திரமான மற்றும் பொது சுகாதார பாதுகாப்பின் பொது நிறுவனம் ஆகும். இதில் இருந்துப் பிரிந்து செல்வது கண்டிக்கத்தக்கது என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS