இந்தியாவிற்கு சவால் விடும் சீனா! புதிய சாலையினை அமைத்தது?

29 July 2020 அரசியல்
road.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை நிலவி வருகின்ற சூழ்நிலையில், தற்பொழுது 20 கிமீ அளவிற்கு இமாச்சலப் பகுதியில் சாலை அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் மற்றும் லே பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. இந்தப் பகுதிகளில் இரு நாட்டு இராணுவமும், தன்னுடைய இராணுவத்தினையும் பாதுகாப்பிற்கான ஆயுதங்களையும் அதிகளவில் குவித்து வருகின்றனர். இதனால், போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்தியா தற்பொழுது பிரம்மபுத்திரா நதிக்கு அடியில், சுரங்கப் பாதையினை உருவாக்க அனுமதி அளித்து உள்ளது. இதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில், தற்பொழுது சீனா அரசாங்கம், தன்னுடைய இராணுவம் பயன்படுத்துவதற்காக இமாச்சலப் பகுதியில் புதிய சாலையினை அமைத்துள்ளதாகத் தகவல்கள் பரவி உள்ளன.

கடந்த அக்டோபரில் இங்கு சாலைகள் இல்லாத நிலையில், தற்பொழுது சீன இராணுவம் வேகமாக இப்பகுதியில், சாலைகளை அமைத்து வருவதாக அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் தெரிவித்து உள்ளனர். இதனைத் தற்பொழுது, இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

HOT NEWS