ஏரியில் மூழ்கியச் சீனப் பேருந்து! 21 பேர் பரிதாப பலி!

08 July 2020 அரசியல்
mnmhelpp1.jpg

சீனாவில் உள்ள ஏரி ஒன்றில், பயணிகள் பேருந்து மூழ்கியதில் அதில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சீனாவில் கடந்த சில வாரங்களாக கனமழைப் பெய்து வருகின்றது. அவ்வப்பொழுது, சூரைக்காற்றும் வீசி வருவதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், சீனாவின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைசவ் மாகாணத்தில், விபத்து ஒன்று ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த ஹாங்ஷான் என்ற குளத்திற்குள் விழுந்தது.

இதில், கல்லூரிப் பயணத்திற்காக சென்ற 15 இளைஞர்கள் உட்பட, 21 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 15 பேர் இந்த மூழ்கியப் பேருந்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம், தற்பொழுது ஒட்டுமொத்த சீனாவினையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS