எல்லையில் படைகளைக் குவிக்கும் சீனா! தொடரும் பதற்றம்!

25 June 2020 அரசியல்
ladakhlatest.jpg

எல்லையில் தற்பொழுது தொடர்ந்து, தன்னுடையப் படைகள், சீன இராணுவம் குவித்துக் கொண்டே உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், இரு நாட்டு இராணுவமும், சர்ச்சைக்குரியப் பகுதிகளில் இருந்து, தங்களுடைய இராணுவத்தினை பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தன. இருப்பினும், தற்பொழுது அப்பகுதிகளில் சீன இராணுவம் பல முகாம்களையும், கூடாரங்களையும் அமைத்து உள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவு, இந்திய வீரர்களை சீன இராணுவம் கொடூரமாகத் தாக்கிக் கொன்றது. இதனால், இரு நாட்டிற்கு இடையிலும், போர் பதற்றம் அதிகரித்தது. இதனிடையே, உயர் மட்ட அதிகாரிகள் தொடர்ந்து இரு நாட்டுத் தரப்பிலும் இருந்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சூழ்நிலையில், நேற்று நடைபெற்றக் கூட்டத்தில், இரு நாட்டு இராணுவமும் தங்களுடைய வீரர்களை லடாக் பகுதிகளில் இருந்து குறைத்துக் கொள்ள முடிவு செய்தன.

இந்த சூழ்நிலையில், புதிதாக கிடைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளன. லடாக் பகுதியில் பலப் பெரிய கட்டுமானங்களை உருவாக்கும் முயற்சியில், சீன இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. கடந்த வாரம், அங்கு புல்டோசர்கள், கனரக வாகனங்கள், என பல வாகனங்கள் அங்கு சீனாவில் கொண்டு வரப்பட்டன.

இப்பொழுது, அங்கு புதியதாக கட்டுமானங்கள், கன ரக வாகனங்கள், ஆயுதங்கள் பதுக்க பங்கர்கள் எனப் பல வசதிகளை அந்த நாட்டு இராணுவம் செய்துள்ள அதிர்ச்சியளிக்கும் சம்பவம் குறித்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்பொழுது, மேலும் பதற்றத்தினை தூண்டி உள்ளது.

HOT NEWS