சீனாவில் தடுப்பூசி கண்டுபிடிப்பு! குறைந்து போன பாதிப்பு!

31 March 2020 அரசியல்
coronavirusmedicinef.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவி வந்த கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

சீனாவில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து, கொரோனா வைரஸ் என்ற ஆட்கொல்லி வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸானது அடுத்த 100 நாட்களுக்குள், உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால், 8,00,000 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 35,000 பேர் மரணமடைந்துள்ளனர். 1,50,000 பேர் இந்த நோய் தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்.

உலகின் பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து உள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸிற்கு காரணமாகக் கருதப்படும் சீனாவில், இதன் பாதிப்பானது குறைந்து வருகின்றது. இந்த வைரஸிற்காக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களில், சீனாவின் இராணுவ தலைமை பயோவார்பேர் நிபுணரான சென் வே, இதுகுறித்து பேட்டியளித்தார். அவருடையப் பேட்டியில், தற்பொழுது சீனாவில் இருந்து பரவி வரும் நோய்க்கு, புதிய மருந்தானது கண்டுபிடிக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகின்றது. விரைவில், அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அன்று, இவருடைய ஆய்வாளர்கள் குழுவானது, ஊஹான் பகுதிக்குச் சென்று ஆய்வுகளை நடத்தியது. அப்பொழுது முதல் இதற்கான மருந்தினைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், சீனா முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது எனத் தெரிவித்தார். தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், சர்வதேசத் தரத்தில், விதிகளுக்கு உட்பட்டு மிகப் பெரிய அளவில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

சர்வதேசத் தரத்தில், பாதுகாப்பு, பக்க விளைவுகள், மருந்தின் வீரியம், நோயினைக் கட்டுப்படுத்தும் சக்தி ஆகியவைகளைக் கணக்கில் கொண்டு, இந்த மருந்தானது விரைவில் மக்களுக்காக பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இது தற்பொழுது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு, வயிற்றில் பால் வார்தது போல் உள்ளது.

Source:nypost.com/2020/03/18/chinas-first-coronavirus-vaccine-approved-for-clinical-trials/

HOT NEWS