இந்தியாவில் சென்னை மீது தான் சீனா சைபர் தாக்குதல் அதிகம் நடத்தியுள்ளது!

24 June 2020 அரசியல்
cyberattack.jpg

இந்தியாவின் மீது, சீனாவின் ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ள அதிர்ச்சி அளிக்கும் சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது லடாக் பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால், இரண்டு நாட்டிற்கு இடையிலும் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இனி யாரும் சீனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என, பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்திய மென் பொருள் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவைகளின் மீது, சீன ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை நடத்தி உள்ளது அம்பலமாகி உள்ளது. இதனை, ஆன்ட்டிவைரஸ் மற்றும் கணினி பாதுகாப்பு நிறுவனமான, கே7 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, 2019-2020ம் ஆண்டின் கடைசி காலக் கட்டத்தில், இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதலானது நடைபெற்று உள்ளது. இதில் குறிப்பாக, சென்னை மீதும் அதனைத் தொடர்ந்து பாட்னா மீதும் தான், அதிகத் தாக்குதல் நடைபெற்று உள்ளது.

சென்னையில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அதே போல், ஐடி நிறுவனங்கள், வங்கிகள் எனப் பல நிறுவனங்கள் உள்ளன. இவைகளின் மீது, சீன ஹேக்கர்கள் தங்களுடைய சேட்டையை காட்டியுள்ளன. டிடிஓஎஸ் தாக்குதல், பிஸ்ஸிங், ரிமோட் கோட் எக்ஸிக்யூசன், எஸ்எஸ்எல் அட்டாக், கர்வ்பால் அட்டாக் உள்ளிட்டப் பல ஹேக்கிங் அட்டகாசங்களை அவர்கள் செய்துள்ளனர்.

இந்தியாவினைப் போல ஆஸ்திரேலியாவின் மீதும், சீன ஹேக்கர்கள் தங்களுடையக் கைவரிசையினை காட்டியிருக்கின்றனர். தொடர்ந்து, சீனாவினை சேர்ந்தவர்கள், அண்டை நாடுகள் மட்டுமின்றி, பல வெளிநாட்டு நிறுவனங்களையும் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருவது சீனாவின் மீதான வெறுப்பினை அதிகரித்துள்ளது.

HOT NEWS