WHO அமைப்பிற்கு சீனா நிதியுதவி! அமெரிக்கா கடும் விரக்தி!

25 April 2020 அரசியல்
whochief.jpg

உலக சுகாதார மையத்திற்கு, சீனாவின் சார்பில், தற்பொழுது கூடுதலாக 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியுள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரக்தியில் உள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, சீனாவில் இருந்து பரவி உள்ளது. உலக சுகாதார அமைப்பிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் தற்பொழுது பிரச்சனை நிலவி வருகின்றது. அமெரிக்காவினை, சரியான நேரத்தில் எச்சரிக்க உலக சுகாதார அமைப்பு தவறி விட்டதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியினை, நிறுத்தியும் வைத்தார்.

இதனால், உலக சுகாதார அமைப்பிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை, அமெரிக்கா உதவி நிதியாக அளித்து வந்தது. இது நிறுத்தப்பட்டதால், தற்பொழுது உலக சுகாதார அமைப்பானது, மற்ற நாடுகளுடம் உதவிக் கரம் நீட்டியுள்ளது. அதன் தலைவர் டெட்ரோஸ் இது குறித்துப் பேசுகையில், அமெரிக்காவின் நிதியுதவியினை வேறு நாடுகளின் மூலம் பெற முயற்சிப்போம் என்றார்.

இதனிடையே, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் டெட்ரோஸினைத் தொடர்பு கொண்டு, தங்களால் இயன்ற உதவியினை செய்வதாகக் கூறினார். இந்நிலையில், தற்பொழுது 30 மில்லியன் அமெரிக்க டாலரினை சீனா வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் டாலரினை வழங்கி வந்த சீனா, தற்பொழுது கூடுதலாக 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உள்ளது.

இது தற்பொழுது, அமெரிக்காவின் கோபத்தினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே, கோபத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS