எங்களுக்கு சீனா மட்டுமே துணை நின்றது! பாக் பிரதமர் பேச்சு!

24 September 2019 அரசியல்
imrankhan.jpg

நாங்கள் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது, சீனா மட்டுமே எங்களுக்கு உதவியது என, பாகிஸ்தான் பிரதமர் திரு. இம்ரான் கான் பேசியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள இம்ரான் கான், அங்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார். அதற்கு முன் நேற்று இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் சந்தித்துப் பேசினார்.

அது பற்றி பேசியுள்ள டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில், அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.

பின்னர் பேசிய இம்ரான் கான், நாங்கள் கஷ்டத்தில் இருக்கின்ற பொழுது, இக்கட்டான சூழ்நிலையின் பொழுது, எங்களுக்கு சீனா மட்டுமே உதவிக் கரம் நீட்டியது. அவர்கள் எங்களுக்காக செலவும் செய்தனர். ஆதரவும் அளித்தனர் என்று கூறியுள்ளார். இது தற்பொழுது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Recommended Articles

HOT NEWS