423 மீட்டர் சீன ஊடுறுவல்! அடங்காத சீனா! தொடரும் அட்டகாசம்!

30 June 2020 அரசியல்
ladakhlatest.jpg

இந்திய சீனாவின் சர்ச்சைக்குரிய லடாக் கல்வான் பகுதியில், தற்பொழுது சீன இராணுவம் அத்துமீறி, 423மீட்டர் ஊடுறுவி உள்ளது அம்பலமாகி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் பகுதியில் கடந்த மே 5ம் தேதி அன்று, மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு இராணுவ வீரர்கள் சுமார் 250 பேர் கைகலப்பு, கற்களால் தாக்குதல் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டனர். இதனால், எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவு அன்று, இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் நடத்தியத் தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால், இரு நாட்டிற்கு இடையிலும் கடும் பதற்றம் உருவானது. இதனிடையே, இரு நாட்டு இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. பல்வேறுக் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாட்டு இராணுவமும் தங்களுடையப் படையினை, திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஒப்புதல் அளித்தன. இருப்பினும், சீன இராணுவம் தற்பொழுது அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படங்கள் பல, தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, சீனாவின் இராணுவம் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அத்துமீறி 423 மீட்டர்கள் முன்னோக்கி நகர்ந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, கனரக வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள், 15 கூடாரங்கள், ஒரு பெரிய கட்டிடம் உள்ளிட்டவைகளை உருவாக்கி உள்ளது.

இதனால், மீண்டும் இந்தியா சீனாவிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS