சீனா வேண்டுமென்றோ, தாமாகவோ இதனை உருவாக்கவில்லை என விளக்கம்!

26 March 2020 அரசியல்
coronacovid191.jpg

சீனாவில் இருந்து ஊஹான் நகரில் இருந்து, உலகம் முழுவதும் பரவி வருகின்றது. தற்பொழுது வரை 5,00,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த வைரஸினை சீனா தான், வேண்டுமென்றே உருவாக்கி உள்ளது எனப் பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள சீன தூதர் ஜீ ரோங் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், இந்த உலகை அச்சுறுத்தும் கோவிட்-19 வைரஸினை, சீனா அரசாங்கம் உருவாக்கவோ அல்லது வேண்டுமென்றோ பரப்பவில்லை. இது எங்கிருந்து பரவ ஆரம்பித்தது எனக் கண்டுபிடிக்கப்பட்டாலும், எதிலிருந்து பரவ ஆரம்பித்தது என விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களுமே கூற இயலும். இது புதுவிதமான வைரஸாக இருப்பது தான் சவாலான விஷயமாக உள்ளது.

இந்த நோய்க்கு சீனாவில் அளிக்கப்படும் சிகிச்சையானது, மிகவும் வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மையானாதாகவுமே உள்ளது. இதில், மறைப்பதற்கு எதுவுமில்லை. இந்த வைரஸினை சீனா வைரஸ் அல்லது ஊஹான் வைரஸ் என்பது தவறு. இந்தியாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க, சீனா தயாராக உள்ளது.

இந்த நோயினை உலக சுகாதார அமைப்பும், மற்ற சுகாதார அமைப்பும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்த நோய்க்கு மருந்துக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன எனவும், அவர் கூறியுள்ளார்.

HOT NEWS