வேலையைக் காட்ட ஆரம்பித்த சீனா! பல நிறுவனங்களை வாங்குகின்றது!

03 April 2020 அரசியல்
xi-jinping.jpg

எரிகின்ற வீட்டில் பிடிங்கின மட்டும் லாபம் என்றப் பழமொழி ஒன்று, தமிழில் உள்ளது. அதனை உறுதிபடுத்தும் விதத்தில் சீன அரசாங்கம் தற்பொழுது முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றது.

உலக அளவில், மிகப் பெரிய தாக்கத்தினை சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது வரை, 10,16,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 2,11,000 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையானது, 53,069 எட்டியுள்ளது. இந்நிலையில், சீனாவில் இந்தப் பாதிப்பானது முற்றிலுமாகக் குறைந்துள்ளது.

அங்கு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 81,000 என்ற அளவிலேயே நின்றுவிட்டது. மாறாக, இந்த நோயிலிருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும், ஊஹான் பகுதியில் இருந்து நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், புதிதாக மருத்துவமனைக்கு வரவில்லை. இந்த நோயால் ஏற்படும் மரணத்தின் அளவும் குறைந்துள்ளன.

சீனாவில் தற்பொழுது மால்கள், விலங்குகள் சந்தை, ரயில் சேவை உள்ளிட்ட பல சேவைகள் தொடங்கி விட்டன. இந்நிலையில், சீனாவின் புதியத் திட்டம் ஒன்று அம்பலமாகி உள்ளது. அந்நாட்டில் இருந்து தான், பெரும்பாலான நாடுகளுக்கு, வென்டிலேட்டர், முகக்கவசம், மருத்துவக் கருவிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மருந்துப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை வாங்கும் முயற்சியில் சீனா வேகமாக ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு வாங்கப்படும் நிறுவனங்களை வைத்து, பல மருத்துவ உபகரணங்கள், மாஸ்க்குகள், பேண்ட்டேஜ், வென்டிலேட்டர் உள்ளிட்டவைகளை அசுர வேகத்தில் தயாரிக்கவும் ஆரம்பித்து உள்ளனர். இதனால், வீழ்ந்த சீனாவின் பொருளாதாரம் சரியாகும் எனக் கூறப்படுகின்றது.

HOT NEWS