போர் விமானங்களை குவிக்கும் சீனா! சுற்றி வளைக்க இந்தியா அமெரிக்கா முடிவு!

03 September 2020 அரசியல்
fighter-jet-1.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், சீனாவின் செயல்களுக்கு அமெரிக்கா தன்னுடையக் கண்டனத்தினைக் கடுமையாகத் தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, இந்திய வீரர்கள் 20 பேரினை சீன இராணுவத்தினர் கொன்றனர். இதற்குப் பழி வாங்கும் விதமாக, சீனாவின் பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. ஆனால், சீன அரசோ அதனைப் பற்றிக் கவலைப்படாமல், தொடர்ந்து தன்னுடையப் படையினை லடாக் பகுதியில் குவித்து வருகின்றது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவும் தன்னுடையப் படைகளைக் குவித்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில், சீனா தன்னுடைய சக்தி வாய்ந்த ஜே 20, ஜே 16 ரக போர் விமானங்களை லடாக் பகுதியில் குவித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவத் தளபதி நர்வானே, லடாக் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ளார். இந்தியாவின் ரபேல் விமானங்கள் தற்பொழுது லடாக் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் போர்கப்பல் ஒன்று, தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்டு உள்ளது.

சீனாவின் செயல்கள் குறித்து, அமெரிக்காத் தொடர்ந்து கண்டனம் எழுப்பி வருகின்றது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இது குறித்து கூறுகையில், இந்தியா-சீன எல்லைப் பிரச்சனையினை அவர்கள் அமைதியாகப் பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என நம்புகின்றோம். திபெத் முதல் இந்திய இமாலய மலைப் பகுதி வரையிலும், சீனா தன்னுடைய ஆதிக்கத்தினைச் செலுத்த முயற்சிக்கின்றது.

அதே போல், தென் சீனக் கடலிலும் இதன் ஆதிக்கத்த்தினைக் காண முடிகின்றது. இது உலக நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலான விஷயம் ஆகும் என்றுக் கூறியுள்ளார். இந்த நிலையில், சீனாவின் செயல்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என, நிக்கி ஹேலி தெரிவித்து உள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில், தன்னுடைய வலிமையினை சீன அரசு பெருக்கிக் கொண்டே உள்ளது.

இதனால், இந்தியாவிற்கு அதிக முன்னுரிமை வழங்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியர்கள் அமெரிக்கர்களுக்கு பகைவர்கள் அல்ல என்பதை, அமெரிக்கர்கள் நன்கு அறிவர். இந்தியா தன்னுடைய வெற்றிக் கதையினை பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது. டிரம்பின் அரசு, சீனாவின் நாடகத்தினைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

டிரம்பின் ஆட்சியில் அமெரிக்காவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை, உணர்ந்துள்ளது. அது இந்தியா தான். இந்தியா தன்னுடைய வலிமையைக் காட்டும் நேரமிது என்றுக் கூறியுள்ளார். இது தற்பொழுது சீனாவிற்கு பெரிய அடியாக மாறியுள்ளது.

HOT NEWS