இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் பிரச்சனை நிலவி வருகின்ற சூழலில் இந்தியாவினை வீழ்த்த, புதிய கிராமத்தினை சீனா உருவாக்கி இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
கடந்த மே மாதம் தொடங்கி, லடாக் மற்றும் லே பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லைப் பிரச்சனையானது நீடித்து வருகின்றது. இதனையொட்டி, இரு நாடுகளும் தங்களுடையப் படைகளை, எல்லைப் பகுதிகளில் குவித்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவினை வீழ்த்துவதற்காக சீனா பூடானின் எல்லைப் பகுதியில், புதிய கிராமம் ஒன்றினை உருவாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, இந்திய அரசு பூடான் இராணுவத்திடம் விளக்கம் கேட்டது. அதற்குப் பதிலளித்துள்ள பூடான், பூடானில் சீனாவிற்கு என, சொந்தமாக எவ்வித நிலமும் இல்லை எனக் கூறியுள்ளது. பூடானின் இராணுவமானது மிகவும் சிறியது. ஆதலால், அதனையும், அதன் எல்லைகள் மற்றும் நிலப் பரப்புகளை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா தொடர்ந்து முயன்று வருகின்றது. அதனால், பூடானின் இராணுவத்திற்கு, இந்தியா பயிற்சி உட்பட பல உதவிகளை செய்து வருகின்றது.
இந்த சூழலில், சமூக ஊடகங்களில் பலப் புகைப்படங்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன. அதில், சீனா இந்தியாவிற்கு எதிராக தாக்குவதற்காக, பூடான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் புதியக் கிராமம் ஒன்றினை செயற்கையாக உருவாக்கி உள்ளது என்றுக் கூறி வருகின்றனர். இதனை பூடான் அரசு மறுத்துள்ளது. இருப்பினும், சீனாவின் செயல் குறித்து, அந்நாட்டு ஊடகங்கள் இவ்வாறு கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.