சீனாவின் வல்லரசு திட்டம்! ஆடிப் போயிருக்கும் உலக நாடுகள்!

19 April 2020 அமானுஷ்யம்
usavschina.jpg

உலகம் முழுக்க தற்பொழுது சீனாவின் மீது, நேரடியாகவும் மறைமுகமாகவும் கோபமாகவே உள்ளன. இருப்பினும், சீனாவின் பொருளாதார வலிமை மற்றும் அதன் இராணுவ வலிமையினைக் கருத்தில் கொண்டு, வெளியில் தங்களுடையக் கோபத்தினைக் காட்டிக் கொள்வதில்லை. இந்தியா உட்பட எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும், சீனாவின் மீது பெரிய அளவில் நம்பிக்கையில்லை.

ஏனெனில், அதன் செயல்கள் மற்றும் அந்நாட்டு பொருட்கள் மீதான மதிப்பே முக்கியக் காரணம் ஆகும். அண்மையில், கடந்த ஒரு சில ஆண்டுகளில், சீன பொருட்களுக்கு இந்திய அரசாங்கம், கடுமையான வரியினை விதித்தது. அதனை கடுமையாக கண்டித்த சீன அரசாங்கம், உடனடியாக இந்தியாவினை நேரடியாக மிரட்டும் விதத்தில் எச்சரிக்கை விடுத்தது.

உடனடியாக சீன பொருட்களின் மீதான வரியினைக் குறைக்காவிட்டால், இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. இதனால், மோடித் தலைமையிலான மத்திய அரசு, உடனடியாக அந்நாட்டுப் பொருட்கள் மீதான வரியினை, பழைய நிலைக்கு கொண்டு வந்தது. இது சீனாவின் வலிமையை, உலகிற்கு உணர்த்தியது. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பொருட்களில், 80 முதல் 90 சதவிகிதம் சீனாவில் தயாராகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்த அளவிற்கு, அதன் பொருளாதாரம் இந்தியாவில் பெரும் பங்காற்றுகின்றது. சீனாவின் 28% பொருட்கள் இந்தியாவில் தான் விற்கப்படுகின்றது என்பது சற்று வேதனையான விஷயமாகும். காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும், சீனாவினை சமாளிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. இது ஒரு பக்கம் இருக்க, சீனா நேரடியாக அமெரிக்காவுடன் மோத ஆரம்பித்து விட்டது.

அதன் முதல் படி தான், இந்த வர்த்தகப் போரும், கொரோனா வைரஸ் பிரச்சனையும். அமெரிக்காவிற்கு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்ததில் இருந்து, தொடர்ந்து சீனப் பொருட்கள் மீதான வரியினை உயர்த்தி வருகின்றார். இதனால், சீனாவும் அமெரிக்கப் பொருட்களின் மீது, அதிக வரிகளை விதித்தது. உண்மையைக் கூற வேண்டும் என்றால், மேட் இன் யூஎஸ்ஏ என்று கூறப்படுகின்ற முக்கால்வாசிப் பொருட்கள், சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆப்பிள் ஐபோன் முதல், பல மின்னணு சாதனங்கள் சீனாவில் தான் உற்பத்தி ஆகின்றன. இந்த சூழ்நிலையில், தொட்ந்து தன்னுடைய நாட்டில் விற்கப்படும் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டதால், அமெரிக்காவின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சீனாவுடன் சமரமாக செல்வதற்கு அதிபர் ட்ரம்ப் முடிவு செய்தார். சீனாவிற்கு தன்னுடைய மனைவி மெலானியா ட்ரம்புடன் சுற்றுலா சென்றார்.

அங்கு, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில், வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கினை, இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து, சீன அதிபர் பெரிதும் மதிக்கின்ற தமிழகத்திற்கு வந்தார். அங்கு, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் சந்தித்தனர். இருப்பினும், அந்த சமயம் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

வெறும் நட்பு ரீதியான சந்திப்பாகவே அது அமைந்தது. இவர்களுடைய சந்திப்பினைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு இந்தியப் பிரதமர் மோடி சுற்றுலா சென்றார். அங்கு ஹவ்டிமோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் கலந்து கொண்டார். பின்னர், இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகின்றது. நம்முடைய இந்திய நாட்டிற்கு அதிபர் ட்ரம்ப் வர வேண்டும் என, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

அவருடைய அழைப்பினை ஏற்று, இந்தியாவிற்கு வந்தார் டொனால்ட் ட்ரம்ப். இந்த சந்திப்பில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. உலகின் மிகப் பெரிய மாநாடும் அங்கு நடைபெற்றது. நாமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியானது குஜராத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற்றது. அதில், டொனால்ட் ட்ரம்பும், பிரதமர் மோடியும் பேசினர்.

பின்னர், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குத் திரும்பினார் டொனால்ட் ட்ரம்ப். இவைகள் நடந்த ஒரு சில மாதங்களில், கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டது. இந்த வைரஸ் காரணமாக, தற்பொழுது ஒன்றரை லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர். இதில், உலக வல்லரசான அமெரிக்கா தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வைரஸ் பரவியதன் காரணமாக, அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அதன் பொருளாதாரமானது, பழைய நிலைக்கு திரும்புவதற்கு எப்படியும் 18 மாதங்கள் ஆகும் என, அந்நாட்டு பெடரல் பேங்க் கணித்துள்ளது. இதனை சரிகட்டுவதற்காக, பல நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகின்றார். இதற்கிடையில், சப்தமில்லாமல் சீன அரசாங்கமானது, உலகின் பல நிறுவனங்களை வாங்க ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஹெச்டிஎப்சி வங்கியின் ஒரு சதவிகிதத்தினை முற்றிலுமாகக் கைப்பற்றியது. இது மட்டுமின்றி, உலகின் பல வங்கிகள், நிறுவனங்கள் என பலவற்றையும் கைப்பற்றி வருகின்றது. இது தற்பொழுது அமெரிக்காவின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே, சீனாவிற்கு வழங்கப்பட்டு வந்த ஐடி ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும், வளரும் நாடுகளான மியான்மர், தாய்லாந்து, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அங்கு மிகக் குறைவான விலையில், அதிக நபர்கள் தரமான சேவையை வழங்குவதால், அங்கு தன்னுடைய ப்ராஜெக்ட்டுகளை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அதே போல், இந்தியாவிற்கு வழங்கி வரும் ப்ராஜெக்டுகளின் எண்ணிக்கையானது, கணிசமாகக் குறைந்தும் விட்டது. அதனை சரிகட்டும் பொருட்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவானது போராடி வருகின்றது. தற்பொழுது பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக, பல நாடுகளுக்கு மருந்துப் பொருட்கள், கொரோனா வைரஸை கண்டுபிடிக்கும் கருவிகள், மருத்துவ உபகரணங்கள், மாஸ்க்குகள், சானிட்டைசர்கள் என பலவற்றையும் ஏற்றுமதி செய்து வருகின்றது சீனா.

இந்த ஏற்றுமதியின் காரணமாக, பல லட்சம் கோடி அளவிற்கு கொள்ளை லாபத்தினை அடைவதை, அமெரிக்காவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அந்த பாதிப்பினை வைத்து, சீன அரசாங்கம் லாபம் ஈட்டுவதை, ட்ரம்ப்பால் ஜீரணிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பானது, சீனாவில் எப்படி இந்த கொரோனா வைரஸானது பரவ ஆரம்பித்தது என விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு வேளை, சீனா தான் இந்த வைரஸைப் பரப்பியது எனத் தெரிந்தால், விரைவில் போர் கூட வர வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே, சீனா தான் இந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்துள்ளது என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் போட்டியினால், சிறிய நாடுகளான வங்கதேசம், நேபாளம், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பெரிய லாபம் அடைகின்றன என்பது தான் உண்மை.

இதில், சீனாவிற்கு எவ்வித இழப்பும் இல்லை. ஆனால், அமெரிக்காவிற்கு தான் இழப்பானது, மனித உயிர்கள் அளவிலும் சரி, பொருளாதார அளவிலும் கடுமையாக ஏற்பட்டு உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், பொருளாதாரத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்குள், அமெரிக்காவினை சீன அரசு எளிதாக தூக்கி சாப்பிட்டு விடும் என புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

HOT NEWS