அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் விருப்பம் இல்லை! சீனா அதிரடி!

09 July 2020 அரசியல்
xi-jinping.jpg

அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் விருப்பம் இல்லை என, சீன அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்கனவே, வர்த்தப் போரானது மறைமுகமாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸால், அமெரிக்கா கடுமையாகப் பாதிப்படைந்து உள்ளது. இதனால், அமெரிக்க அரசாங்கமும், அதன் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சீனாவினைத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

அமெரிக்காவிற்கு எதிராக, சீனாவும் பல மறைமுக வேலைகளை செய்யாமலும் இல்லை. அடுத்த ஆண்டுடன் அணு ஆயுத ஒப்பந்தமானது காலவதியாகிவிடும். இதனையடுத்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்க வேண்டும் என, அமெரிக்கா கோரிக்கை விடுத்து இருந்தது. இதில், ரஷ்யா ஏற்கனவேப் பங்கேற்க இருப்பதாக அறிவித்து விட்டது. இருப்பினும், தற்பொழுது சீனா பங்கேற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இது குறித்து பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை ஆயுதக் கட்டுப்பாடு அமைப்பின் தலைவர் பூ காங், இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், சீனா கலந்து கொள்ளாது என்றுத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், அமெரிக்காவிடம் இல்லாத அணு ஆயுதங்களே இல்லை. அது, சீனாவினைக் குறைத்துக் கொள்ளக் கூறுகின்றது. சீனாவின் அளவிற்கு, அமெரிக்கா தன்னுடைய அணு ஆயுதங்களைக் குறைத்துக் கொண்டால், கண்டிப்பாக, சீனா இந்தப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS