சீனா அணுசக்தி சோதனை! அமெரிக்கா குற்றச்சாட்டு! சீனா மறுப்பு!

17 April 2020 அரசியல்
chinanuclear.jpg

சீன அரசாங்கம், இரகசியமாக அணு சக்தி சோதனையினை செய்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுக்க, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த நிலையில், அமெரிக்கா தான் இந்த வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸை, சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைத்தார். இருப்பினும், இப்பொழுது கொரோனா வைரஸ் என்றே அழைத்து வருகின்றார்.

இந்நிலையில் சீன அரசாங்கம், அனைத்து நாடுகளுக்கும் முகமூடி, மருந்துகள், என பலவற்றையும் ஏற்றுமதி செய்து லாபம் அடைந்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனிடையே, தற்பொழுது சீன அரசாங்கம், மிகச் சிறிய அளவிலான அணு ஆயுத சோதனையைச் செய்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள சீன வெளியுறவுத்துறை, அணுசக்தி தொடர்பான தடையில், சீனா திட்டவட்டமாக உள்ளது. அமெரிக்க அரசாங்கம், தவறானக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது. சீனா எப்பொழுதும், ஒருவித பொறுப்பான கட்டமைப்பினைப் பின்பற்றி வருகின்றது. சீனாவின் மீது, அமெரிக்கா சுமத்தும் இந்தப் பழியானது, எவ்வித ஆதாரமும் இல்லாத ஒன்று எனத் தெரிவித்து உள்ளது.

HOT NEWS