59 ஆப்களுக்கு தடை! சீனா வருத்தம்! இது சர்வதேச வர்த்தகத்திற்கு புரம்பானது!

01 July 2020 அரசியல்
zhaolijian.jpg

சீனாவின் 59 ஸ்மார்போன் ஆப்களுக்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு. இதற்கு சீனா வருத்தத்தினை பதிவு செய்துள்ளது.

சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்தியர்கள் டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை நீக்க வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும், சீனாவிடம் இந்தியர்களின் தகவல்களைத் தர வாய்ப்பு இருப்பதாகக் கூறி, டிக்டாக் உள்ளிட்ட 59 ஸ்மார்ட்போன் ஆப்களை இந்திய அரசு தடை செய்தது.

இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்து, சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியான், இது தங்களுக்கு வருத்தம் அளிக்கக் கூடியதாக இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், இது சற்று வேதனை அளிக்கும் விஷயம் எனவும், இந்தியா மற்றும் சீனாவின் வர்த்தக உறவினைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவிற்கும் உள்ளது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், டிக்டாக் தடை செய்யப்பட்டதற்கு டிக்டாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தாங்கள் எவ்விதத் தகவலையும், எந்த நாட்டு அரசுடனும் பகிர்வதில்லை எனவும், பயனர்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய அரசிடம் மீண்டும் மறு ஆய்விற்காக எங்கள் ஆப்பினை தயார் செய்து முறையிடுவோம் என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS