சீனாவிற்கு எதிராக சீன மக்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு!

07 July 2020 அரசியல்
mnmhelpp1.jpg

சீனாவில் வசித்து வருகின்ற உய்குர் இன மக்கள், சர்வதேச நீதிமன்றத்தில் முதன் முறையாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு, உய்குர் இன முஸ்லிம் பெண்களின் தலைமுடியானது அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனைக் கண்டுபிடித்துள்ள அமெரிக்க அரசாங்கம், சீனாவின் மீது குற்றம் சாட்டியது. இதனிடையே, சீனாவின் பல சில்மிஷங்கள் தற்பொழுது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சீனாவில் உள்ள சிறுபான்மையினரான இஸ்லாமியர்களில், உய்குர் இனம் என்ற இஸ்லாமியப் பிரிவினர் உள்ளனர். அவர்கள் தற்பொழுது சீனாவின் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக, பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வதை முகாம்களில் இருப்பவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சீனாவின் பழக்க வழக்கத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் மாற வேண்டும் என எச்சரிக்கப்படுகின்றனர்.

அவர்கள் தொடர்ந்து தன்னுடைய சொந்த அரசாங்கத்தாலேயே நசுக்கப்படுவதால், தற்பொழுது சீனாவில் உள்ள உய்குர் இன மக்கள், தற்பொழுது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை நாடியுள்ளனர். உலகளவில் மாபெரும் நாடாக வளர்ந்துள்ள சீனாவின், மீது அந்நாட்டு மக்களே கடும் விரக்தியில் வழக்குத் தொடர்ந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். அவர்களுடைய தலைமுடிகள் வெட்டப்பட்டு, அழகுசாதனப் பொருட்களாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

HOT NEWS