ஊஹானில் ஒரு கோடி சோதனை! மீண்டும் பதறும் சீனா!

15 May 2020 அரசியல்
coronaplasma.jpg

சீனாவின் ஊஹான் பகுதியில் உள்ள ஒன்றரை கோடி பேருக்கு, கொரோனா வைரஸ் மீண்டும் பரவி உள்ளதா என்ற சோதனை நடைபெற்று வருகின்றது.

உலகம் முழுவதும் சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணாத்தில் இருந்து, கடந ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸானது பரவ ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 160 நாட்களில் 35 லட்சம் பேர், இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 லட்சம் பேர் இதனால் மரணமடைந்து உள்ளனர். உலகின் பல நாடுகளிலும், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், உலகின் பல நாடுகளிலும் பொருளாதாரப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், சீனாவின் ஊஹான் பகுதியில் மீண்டும் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து இருக்கலாம் என்ற அச்சம் உருவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். சீன அரசாங்கமும் இதனால் கவலை அடைந்துள்ளது. இது குறித்து, பேசிய மூத்த அதிகாரி ஒருவர், ஒரு வேளை கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வந்தால், கண்டிப்பாக முன்பை விட மோசமாக மக்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.

இதனால், தற்பொழுது ஊஹான் பகுதியில் வசித்து வருகின்ற ஒன்றரை கோடி மக்களிடமும், மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு வேளை, தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அப்பகுதியினை மீண்டும் முடக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த சோதனையை மீண்டும் அடுத்த பத்து நாட்களுக்குள் செய்து முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

HOT NEWS