மிகவும் மோசமானப் போருக்குத் தயாராகுங்கள்! சீன அதிபர் அதிரடி உத்தரவு!

27 May 2020 அரசியல்
xijinping2019.jpg

மிகவும் மோசமானப் போருக்குத் தயாராகுங்கள் என, சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.

தற்பொழுது இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் லடாக் பகுதியில் பிரச்சனை நிலவி வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார். 66 வயதான ஜி பேசுகையில், நாட்டினை இறையாண்மையை உறுதியுடன் பாதுகாக்க அனைவரும் தயாராகுங்கள். மிகவும் மோசமானப் போருக்குத் தயாராகுங்கள் என்றுக் கூறியுள்ளார்.

இருப்பினும், அவர் இந்த இந்தியா-சீனா போரினைத் தான் குறிப்பிடுகின்றார் என தெரியவில்லை. தற்பொழுது ஆட்சியில் இருக்கும் சீன அதிபர் தான், வாழ்நாள் முழுவதும் சீனாவின் அதிபராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழ்நிலையில், சீன அரசாங்கம், தொடர்ந்து தன்னுடைய இராணுவத்தினை லடாக் பகுதியில் குவித்துக் கொண்டே வருவதால், பதற்றம் அதிகரித்து வருகின்றது.

HOT NEWS