அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு! உங்கள் குழுவினை அனுமதிக்க முடியாது!

21 April 2020 அரசியல்
xijinping2019.jpg

சீனாவிற்குள், அமெரிக்காவின் ஆய்வுக் குழுவினை அனுமதிக்க முடியாது என, அந்நாடு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவில் தினமும் 2,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்து வருகின்றனர். இதனால், அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்கா தான் முதல் இடத்தில் உள்ளது.

தற்பொழுது வரை, அமெரிக்காவில் இந்த வைரஸால் 8,00,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்றில் இருந்து 75,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம், 43,000 பேர் இந்த வைரஸ் காரணமாக மரணமடைந்து உள்ளனர். இதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரக்தியில் இருக்கின்றார். உலக சுகாதார மையத்திற்கு வழங்கி வந்த நிதியினை, அவர் நிறுத்தி உள்ளார்.

தொடர்ந்து சீனாவின் மீது பழி சுமத்தியும் வருகின்றார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சீனாவில் தான் இந்த வைரஸானது உருவாகி இருக்கின்றது. இது அங்குள்ள வைரஸ் ஆய்வு செய்யும் ஆய்வு மையத்தில் இருந்து, லீக்காகி இருக்கலாம் எனக் கூறினார். இதனை விசாரிக்க தற்பொழுது அமெரிக்கா முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அதற்கான குழுவினையும் அமெரிக்க அரசாங்கம் தற்பொழுது உருவாக்கி உள்ளது. அதனை சீனாவிற்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இதற்கு, சீனாவிடம் அனுமதியும் கேட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறியுள்ளது சீனா.

இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், அமெரிக்காத் தொடர்ந்து ஆதாரமற்றக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது. எவ்வித, எதிர்பார்ப்பும் இல்லாமல், சீன அரசாங்கம் பல உலக நாடுகளுக்கு உதவி செய்து வருகின்றது. இதற்குப் பல உலக நாடுகள் தங்களுடைய நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்து வருகின்றன என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS