இந்திய வீரர்களை கைது செய்து விடுவித்த சீனா! லீக்கான தகவல்!

24 May 2020 அரசியல்
chinaflag.jpg

கடந்த வாரம் தொடங்கி தற்பொழுது வரை, இந்தியா சீன எல்லையில் போர் பதற்றம் நீடித்து வருகின்றது.

இந்திய எல்லைப் பாதுகாப்ப்புப் படை வீரர்களுக்கும், சீன எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையில் கடந்த வாரம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும், ஒருவரை ஒருவர் கற்களால் அடித்துக் கொண்டனர். கட்டி உருண்டும் சண்டையிட்டுள்ளனர். இந்தப் பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவதற்காக, இரு நாட்டு உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், என்டிடிவி செய்தியானது இந்திய வீரர்களை, சீன இராணுவம் கைது செய்ததாகவும் பின்னர் விடுவித்ததாகவும் செய்தி வெளியட்டுள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும், பிரதமரின் அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவைகளைப் பற்றி, இராணுவத் தளபதி நாரவானேயும் லே பகுதியில் ஆய்வினை மேற்கொண்டார்.

மேலும், லடாக் பகுதியில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிலையில், சீனா மீது புகார் கூறும் இந்திய தரப்பு, சீன ஹெலிகாப்டர்கள் லடாக் பாதுகாப்புப் பகுதியில் பறந்ததாகவும், மேலும் அங்குள்ள குளத்தில் மிக வேகமாக படகில் சென்றதாகவும் தெரிவித்துள்ளது. இவைகள் அனைத்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேட்டறிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

HOT NEWS