வீரர்கள் மோதலுக்கு இந்தியா தான் காரணம்! சீனா கரார்!

20 June 2020 அரசியல்
zhaolijian.jpg

சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலுக்கு, இந்தியா தான் காரணம், என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில், சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது, கற்கள், இரும்புக் கம்பிகள், கட்டைகள் ஆகியவைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சீனாவின் தரப்பில் 43 பேர்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சீனா கூறியுள்ளது.

இந்த சூழ்நிலைக் காரணமாக, இரண்டு நாடுகளுக்கு இடையிலும் போர் பதற்றம் உருவாகி உள்ளது. இது பற்றி, இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இன்னும் பிரச்சனைத் தீர்ந்தபாடில்லை. இது குறித்து பேசியுள்ள, சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சவோ லிஜியன், இந்தியா தான் அத்துமீறி சீன எல்லைக்குள் வந்தது.

இந்த மோசமான தாக்குதல் பிரச்சனைக்கு இந்தியா தான், முழு காரணம். அமைதியினை நிலை நாட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. கல்வான் பள்ளத்தாக்கு சீனாவிற்கு சொந்தமானது எனவும் அவர் பேசியுள்ளார்.

HOT NEWS