கொரோனா வைரஸானது, இந்தியாவில் இருந்து உருவானது என, சீன விஞ்ஞானி கூறியிருப்பது சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து பரவியிருக்கின்றது என, விஞ்ஞானிகள் கருதி வந்தனர். இதனை, உலக சுகாதார மையமும் ஏற்றுக் கொண்டது. அமெரிக்காவோ தொடர்ந்து, சீனா தான் இந்த வைரஸைப் பரப்பி வருகின்றது எனக் கடுமையாகக் குற்றம்சாட்டியது.
ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நாடுகள் தங்களுடைய கருத்தினை ஏற்கனவே தெரிவித்து இருந்தன. இதனை மறுத்து வந்த சீனா, தற்பொழுது புதியதாகக் குண்டு ஒன்றினை போட்டு உள்ளது. அதன்படி, சீனாவில் இருந்து இந்த வைரஸானது உருவாகவில்லை எனக் கூறி வருகின்றனர் சீன விஞ்ஞானிகள். இந்த வைரஸானது இந்தியாவில் உருவானது என்றும், அதுவும் கடந்த 2019ம் ஆண்டு, ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தான், இந்த வைரஸானது பரவ ஆரம்பித்தது என்றும் கூறியுள்ளனர்.
பீஜிங்கினைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், இந்தியாவில் இருந்து மிருகங்கள், பறவைகள் மூலம் பரவியதாகவும், இந்த வைரஸ் பரவுவதற்கு நீரே காரணமாகவும் இருந்துள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து பேசியுள்ள அமெரிக்க பேராசிரியர்கள், சீனா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தேவையில்லாமல் இந்தியாவின் மீது, பழி போடுகின்றது என்றுக் கூறியுள்ளனர்.