முக்கிய ஆதாரங்களை அழித்தோம்! சீன விஞ்ஞானி ஒப்புதல்!

22 May 2020 அரசியல்
laboratorytest.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை, சுமார் 50 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். மேலும், இந்த வைரஸ் காரணமாக, 3,32,000 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த வைரஸால், உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தான் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அங்கு தினமும், 1000க்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். இந்த வைரஸ், சீனாவின் வனவிலங்கு சந்தையில் இருந்து பரவி இருக்கலாம் என, சீனா அறிவித்தது. ஆனால், அந்த வைரஸானது சீனாவின் ஊஹான் பகுதியில் அமைந்துள்ள ஆய்வுக் கூடத்தில் இருந்து தான் பரவியிருக்கின்றது என, தொடர்ந்து சீனாவின் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றன.

இதனிடையே, சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உலகின் பல நாடுகளும் கோரிக்கை வைத்தன. அதில், 116 நாடுகளின் ஆதரவுடன் கொரோனா வைரஸ் குறித்து, விரைவில் சர்வதேச விசாரணையும் நடைபெற உள்ளது. இந்நிலையில், சீனாவில் முதன் முதலாகப் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் மாதிரிகளை அழிக்க, சீனாக் கூறியதாக அந்நாட்டு விஞ்ஞானி லியூ டெங்ஃபெங் கூறியுள்ளார்.

இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறுகையில், சீனாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம், உலக சுகாதார மையத்தின் குழு ஆய்விற்காக, ஊஹான் பகுதிக்கு வந்தது. ஆனால், அவர்கள் வைரஸ் ஆய்வுக் கூடத்திற்குச் செல்லவில்லை. மேலும், அவர்கள் வருவதற்கு முன்பே, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் கட்ட மக்களின் மாதிரிகள் அழிக்கப்பட்டு விட்டன என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

HOT NEWS