சீனாவின் நிலையை உணர்ந்து உதவ இந்தியா முன்வர வேண்டும்! சீன தூதர் கோரிக்கை!

19 February 2020 அரசியல்
coronavirus.jpg

சீனாவில் தற்பொழுதுள்ள நிலையினை உணர்ந்து, இந்தியாவின் அரசாங்கம் பொருளாதார அடிப்படையில் உதவ முன்வர வேண்டும் என, சீன தூதர் சுன் வென்டாங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை, சீன அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருகின்றது. தற்பொழுது வரை, அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அங்கு இருப்பவர்களை, இந்திய வெளியுறவுத் துறையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. தற்பொழுது நிலவும் அசாதாரண சூழ்நிலைக் காரணமாக, சீனாவின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனிக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் பொருளாதார வர்த்தகமானது, சுமார் 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம்முடைய உறவானது, போற்றப்பட வேண்டியது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவினைக் கருத்தில் கொண்டு, சீனாவிற்காக வரிகளைக் குறைப்பதும், இறக்குமதி விதிகளைத் தளர்த்துவதும், இந்தியா தங்களுக்கே செய்து கொள்ளும் உதவியாகும்.

எங்களுக்கு உதவி செய்வது, உங்களுக்கு நீங்களே உதவி செய்வதுப் போலத் தான். ஊஹான் பகுதியில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, எவ்வித பிரச்சனையும் இதுவரை ஏற்படவில்லை. தொடர்ந்து, சீனாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

HOT NEWS