6ஜி செயற்கைகோளை அனுப்பிய சீனா! உலக விஞ்ஞானிகள் குழப்பம்!

12 November 2020 தொழில்நுட்பம்
satellite-3977.jpg

உலகளவில் இன்னும் 5ஜி தொழில்நுட்பமே, பயன்பாட்டிற்கு வராத நிலையில், தற்பொழுது 6ஜி செயற்கைக் கோளினை விண்ணிற்கு அனுப்பியுள்ளது சீனா.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல முன்னணி நாடுகளில் தற்பொழுது வரை, 4ஜி தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே 5ஜி தொழில்நுட்பமானது, சோதனை முறையில் ஒரு சில இடங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த 5ஜி தொழில்நுட்பத்தில், 100எம்பிபிஎஸ்க்கும் அதிகமான வேகத்தில் இணையத்தினை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த இயலும். இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், பொதுமக்களின் பயன்பாடானது அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

இந்த தொழில்நுட்பமானது, வருகின்ற 2021 மற்றும் 2022ம் ஆண்டில், பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, சீனா விண்வெளி ஆய்வு மையமானது, தன்னுடைய 6ஜி தொழில்நுட்பத்திற்கான செயற்கைக்கோளினை தற்பொழுது விண்ணில் செலுத்தியுள்ளது. இதுவரை 6ஜி தொழில்நுட்பத்திற்காக மட்டும், சுமார் 12 செயற்கைக்கோள்களினை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது சீனா.

மேலும் ஹைபீரிகுவன்சி டெர்ராஹெர்ட்ஸ் முறையில், பல மடங்கு 5ஜி தொழில்நுட்பத்தினை விடை, அதிவேகத் தொலைத்தொடர்பு சேவைக்கு சீனா தயாராகி வருகின்றது. இந்த வேகமானது ஜிபிபிஎஸ் என்ற அளவில் இருக்கும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS