பிரச்சனைக்குரிய பகுதிகளில், மிகப் பெரிய புல்டோசர்கள், வாகனங்களைக் கொண்டு புதிய கட்டுமானங்களை, சீன இராணுவம் செய்து வருவதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்பொழுது கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும் பதற்றமே நிலவி வருகின்றது. இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளும், தொடர்ந்துப் பதற்றத்தினைத் தணிக்கும் பொருட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தற்பொழுது சீனா தன்னுடைய ஆக்கிரமிப்புப் பணியினைத் தொடங்கி இருப்பது உறுதியாகி உள்ளது.
இணையத்தில் வெளியாகி இருக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, இந்திய இராணுவத்தினர் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ளே நுழைய முடியாதபடி, தன்னுடைய கனரக வாகனங்கள், புல்டோசர்கள், ஆயுதம் ஏந்திய வாகனங்கள் முதலியவற்றை சீன இராணுவம் பயன்படுத்தி வருகின்றது.
மேலும், தன்னுடைய வாகனங்களை வரிசையாக அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. அங்கு செல்லும் நீர் ஓடையின் பாதையினையும் குறைத்து சிறியதாக மாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் பெரியக் கட்டுமானங்களை தற்பொழுது உருவாக்க ஆரம்பித்து உள்ளது. இது தற்பொழுது இந்திய அரசின் கோபத்தினை மேலும் தூண்டியுள்ளது.