உலக சுகாதார மையத்திற்கு சீனா உதவி செய்ய உள்ளதாக தகவல்!

20 April 2020 அரசியல்
chinaflag.jpg

உலக சுகாதார மையத்திற்கு உதவி செய்ய உள்ளதாக, சீன செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்திற்கு நிதி வழங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். சரியான வழிகாட்டுதலை உலக சுகாதார மையம் மேற்கொள்ளவில்லை எனவும், சீனாவிற்கு சாதகமாக செயல்படுகின்றது எனவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த உலக சுகாதார மையத்தின் டெட்ரஸ், ட்ரம்ப்பின் குற்றச்சாட்டினை மறுத்தார்.

மேலும், ஒரு வேளை அமெரிக்கா தன்னுடைய நிதியுதவியினை நிறுத்தினால், அது பற்றிக் கவலையில்லை. அதனை ஈடுகட்டும் பொருட்டு, நேச நாடுகளின் உதவியுடனும், உறுப்பு நாடுகளின் மூலமும் அந்த நிதியினை திரட்ட முயல்வதாக குறிப்பிட்டார். இந்நிலையில், தற்பொழுது சீன அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் ஈ, டெட்ரஸுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அதில், சீன அரசாங்கம் உலக சுகாதார மையத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் என, சீன செய்தி நிறுவனமான சீனா டெய்லி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தற்பொழுது அமெரிக்காவின் சந்தேகத்தினை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், சீனாவின் மீதான கோபத்தினையும் அதிகரித்துள்ளது.

HOT NEWS