படைகளை குவித்துள்ள சீனா! லீக்கான செயற்கைக்கோள் புகைப்படம்!

26 May 2020 அரசியல்
nia.jpg

இன்று இந்தியாவின் முப்படைத் தளபதிகளுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அருணாச்சலப் பிரதேசம், லடாக் உள்ளிட்டப் பகுதிகளில் மாபெரும் பிரச்சனைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் சீன இராணுவ வீரர்களுக்கும், இந்திய இராணுவ வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பு இராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரச்சனைகள் முடிவிற்கு வந்தன.

இந்நிலையில், தற்பொழுது சீன இராணுவம் லடாக் பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை பணியமர்த்தி உள்ளது. அதுமட்டுமின்றி, தற்காலிகமாக விமானத் தளத்தினையும் உருவாக்கி உள்ளது. மேலும், ஆளில்ல்லாத உளவு விமானங்களையும் பறக்க விட்டு வருகின்றன.

இது லடாக் எல்லைப் பகுதியில் பதற்றத்தினை உருவாக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே, விமாப்படை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் தரையிறங்கத் தேவையான விமானதளத்தினை உருவாக்கி வருகின்றது சீனா. மேலும், ஜே 11 மற்றும் ஜே 16 என்ற விமானங்களையும் சீனா நிலைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவி உள்ளன.

இந்த விமான தளம் உருவாக்கப்பட்டு உள்ளதற்கான ஆதாரமானது, சேட்டிலைட் புகைப்படமாக தற்பொழுது லீக்காகி உள்ளது. மேலும், இந்த விமானங்கள் பறக்கத் தேவையான எரிபொருள் நிரப்பும் டேங்குகளும் அங்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த விஷயம் குறித்து, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இராணுவத் தளபதிகளுடன் தற்பொழுது ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

இந்த தொடர் படைக் குவிப்பானது இந்தியா சீனா இடையில், போர் பதற்றத்தினை உருவாக்கி உள்ளது.

HOT NEWS