சீனர்கள் மீது அமெரிக்க குற்றச்சாட்டு! கொரோனா ஊசி குறித்த தகவலை திருட முயற்சி!

22 July 2020 அரசியல்
donaldtrumpvirus.jpg

சீனாவினைச் சேர்ந்த ஹேக்கர்கள், அமெரிக்கா உருவாக்கி வரும் கொரோனா வைரஸிற்கு எதிரான, தடுப்பூசி குறித்தத் தகவல்களைத் திருட முயற்சிப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் தற்பொழுது மோதல் முற்றிக் கொண்டே உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக வர்த்தகப் போராக இருந்து வந்த அமெரிக்கா சீனா உறவானது, கொரோனாவால் முற்றிலும் முடிவிற்கு வந்துவிட்டது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா தான் காரணம் என, அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபரும் சீனா வைரஸ் என கொரோனா வைரஸை பற்றிப் பேசுவது போல, சீனாவினை சாடினார்.

இந்த சூழ்நிலையில், சீனா மீது அமெரிக்கா புதியக் குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளது. அமெரிக்கா தன்னுடைய கொரோனா தடுப்பூசியினை தயாரித்து வருகின்றது. அதனை, சீனாவின் அரசாங்கத்துடன் இணைந்து, சீனாவினைச் சேர்ந்த லி சியாயு மற்றும் டோங் ஜியாஜி என்ற 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் ஹேக் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.

அவர்கள் சீன உளவுத்துறைக்காக செயல்படுவதாகவும், இந்த செயல் அமெரிக்காவிற்கு மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்காவின் எப்பிஐ துணை இயக்குனர் டேவிட் போடிச் கூறியுள்ளார். இது தற்பொழுது புதிய சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS