ரொம்ப சீண்டினால் போர் தான்! சீன செய்தி நிறுவனம் அதிரடி எச்சரிக்கை!

20 September 2020 அரசியல்
xi-jinping.jpg

எங்களை சீண்டிப் பார்க்க நினைத்தால் கட்டாயம் போர் நடக்கும் என, சீன செய்தி நிறுவனம் அதிரடி எச்சரிக்கையினை விடுத்து உள்ளது.

சீனாவிற்கும் தைவானிற்கும் இடையில் எல்லைப் பிரச்சனையானது, நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. இதனிடையே, சீனாவின் 12 ஜே16 ரக விமானங்களும், 2 ஜே-10 விமானங்களும், 2 ஜே-11 போர் விமானங்களும், 2 ஹெச்-6 குண்டு வீசும் விமானங்களும், ஒரு ஒய்-8 ரக நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கும் போர் விமானமும் தைவானுக்குள் பறந்துள்ளன. இதனை தைவான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அவர்களை பின் தொடர்ந்து தைவான் விமானப் படையின் எப்16 போர் விமானங்கள் பறந்ததாகவும் தெரிவித்து உள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தைவான், சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து, சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தி க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கையானது, அதிகாரப்பூர்வமாக செய்தி ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், தைவானை ஆக்கிரமிக்கவே அவ்வாறு சீன விமானங்கள் செய்ததாகவும் கூறியுள்ளது. இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் முன்னாள் தைவான் ஒரு விஷயமே அல்ல. ஆனால், இந்த விமான எச்சரிக்கைக்குப் பின்னால், அமெரிக்காவின் மீதான வெறுப்பே மூலக் காரணமாக பார்க்கப்படுகின்றது.

தைவான் நாட்டிற்கு அமெரிக்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் தற்பொழுது பயணம் மேற்கொண்டார். தன்னுடைய நாட்டிற்கு அருகில் உள்ள தைவான், தன்னுடைய எதிரியுடன் கை கோர்ப்பதை சீன அரசு விரும்பவில்லை. இதற்காகவே, தைவானை எச்சரிக்கை செய்யும் விதமாக இவ்வாறு போர் விமானங்களை தைவான் நாட்டிற்குள் அத்துமீறி பறக்க வைத்துள்ளது. தொடர்ந்து கோபமூட்டும் செயல்களில் தைவான் ஈடுபட்டால், அது போரில் தான் முடியும் என, சீனாவின் க்ளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

HOT NEWS