உலக அளவில் பிரசித்திப் பெற்ற வணிக வலைதளமான iyiou.com, ஏ.ஐ தொழில்நுட்ப வர்த்தகத்தை அளவிட்டுள்ளது. அதன்படி, 2017ல் சீனாவில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திய வியாபாரம் மற்றும் உற்பத்தியின் மதிப்பை அளவிட்டது.
இதன் அறிக்கையின்படி, AI தொழில்நுட்பத்தில், சுமார் 50 பில்லியன் யுவானை (7.8 பில்லியன் டாலர்கள்) பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்தன. இதில் முதல் 100 நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மொத்த வருவாயானது 10 பில்லியன் யுவான் குறைவாக இருந்தது. அதே சமயம் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏஐ நிறுவனங்களுக்கு இழப்பு மற்றும் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என இதன் அறிக்கை தெரிவிக்கிறது.
யாங்சிங், டென்சன் துணைத் தலைவர் மற்றும் AI லேப் தலைவர், ஏ ஐ ஆர் மட்டுமே உதவி, நடைமுறை பயன்பாடுகளில் வெற்றிகரமான சக்தியாக இல்லை என்றார்.
டென்சன் நிறுவனத்தின் துணைத்தலைவரும் ஏ.ஐ. சோதனைக்கூடத்தின் தலைவருமான யாங்சிங். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நடைமுறைப் பயன்பாடுகளுக்கு வெற்றிகரமாக பயன்படுத்த சாத்தியமில்லாததால் இந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ளார். மேலும், ஏ.ஐ துறையில் உள்ள வல்லுநர் ஒருவர் கூறுகையில் இந்தத் தொழில்நுட்பத்தை கார் மற்றும் மருத்துவத் துறைக்குப் பதிலாக கட்டிடத்துறையில் பயன்படுத்தினால் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.