மத்திய சீனாவில் U-வடிவ ஸ்கைவாக்

10 March 2019 அரசியல்
chinaushaped.jpg

விசித்திரமான கட்டிடங்களுக்கும் கட்டுமானங்களுக்கும் பெயர் பெற்ற நாடு சீனா. சீனப் பெருஞ்சுவர் முதல் தற்கால கட்டிடங்கள் வரை, தங்களைடையக் கலைத்திறமையை அவர்கள் காட்டாமல் விட்டதில்லை. அந்த வரிசையில் இவ்வருடம் ஒரு புதிய கட்டுமானத்தைத் திறந்து வைத்துள்ளனர். அதுதான், ஸ்கைவாக்.

ஏற்கனவே, பல ஸ்கைவாக்குகளைக் கட்டியுள்ள சீனா, தற்பொழுது புதிதாக யூ வடிவில் கட்டியுள்ளது. இந்த ஸ்கைவாக்கை இந்த வருடம் ஜீன் 12ம் தேதி திறந்துள்ளது. இதனை மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சின்மி நகரில் வடிவமைத்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஃபுக்ஸ் மலையின் கரையில் ( Fuxi Mountain Glacier ) அமைந்துள்ளது. இதனை சுமார் 3,000 டன் எஃகு மற்றும் மிகவும் கடினமான யூ வடிவிலான கண்ணாடியைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். யூ வடிவில் உள்ள இந்த ஸ்கைவாக் சுமார் 30 மீட்டர் நீளமுடையது.

ஹ்ம்ம். நம்ம நாட்டில எப்பதான் இந்த மாதிரிலாம் பார்க்க முடியுமோ?

HOT NEWS