கேமிங் உலகின் இராஜாவான சீனா. அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியது.

10 March 2019 அரசியல்
games.jpg

உலகின் இ-ஸ்போர்ட்ஸ் என்ற பெருமையை உடைய நாடாக சீனா உருவெடுத்துள்ளது. இதற்கு கடும் போட்டியாளராக உள்ள அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

சீனாவின் இ-ஸ்போர்ட்ஸ் கிளப்பான ராயல் நெவர் கிவ் அப் (Royal Never Give Up) இன்று உலகை ஆளும் ஒரு கேமிங் கிளப்பாக உள்ளது. 2017ம் ஆண்டு கணக்கின்படி, சீனாவின் இ-ஸ்போர்ட்ஸ் சந்தையின் நிகர மதிப்பு சுமார் 780மில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் இது 1075மில்லியன் டாலர்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இப்படியே சென்றால், 20202ல் சீன இ-ஸ்போர்ட்ஸ் மதிப்பு சுமார 2500மில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2017ல் சீனாவில் உள்ள கேமர்களின் எண்ணிக்கை சுமார் 250மில்லியன். இது 2020ல் 300 மில்லியினை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அமெரிக்காவும், கனடாவும் சேர்த்து 37% கேமர்களும் சீனாவில் மட்டும் 15% கேமர்களும் உள்ளனர். உலகளவில் மற்ற நாடுகளை விட் 2016 சீனாவின் கேமிங் வளர்ச்சியும் வருவாயும் 4% அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

நாங்கள் இ-ஸ்போர்ட்ஸை ஒலிம்பிக்கில் சேர்க்க முயன்று வருகிறோம் என்றும், அவ்வாறு சேர்க்க இயலாதபட்சத்தில் தனியாக ஒரு விளையாட்டு அமைப்பை உருவாக்கி அதில் அனைத்து நாட்டு கேமர்களையும் பங்கேற்க வைப்போம் என சீனாவைச் சேர்ந்த பிரபல கேம் டிசைனிங் கம்பெனி ஒன்று கூறியுள்ளது.

HOT NEWS