சீனாவின் ஜே20 விமானங்களால் ரபேல் அருகில் கூட வர இயலாது! முன்னாள் அதிகாரி அதிரடி அறிவிப்பு!

29 July 2020 அரசியல்
rafale-new.jpg

சீனாவின் ஜே20 விமானங்களால் கூட, நம்முடைய ரேபேல் விமானங்களை நெருங்கக் கூட முடியாது என, முன்னாள் தலைமை தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவிற்கு, பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் விமானங்கள் வந்து இறங்கின. இவை உடனடியாக, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இவைகள், தற்பொழுது ஹரியானாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. விரைவில், அவை லடாக் பகுதியில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன.

இது குறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முன்னாள் விமானப்படை தலைமை அதிகாரி தனோவா, சீனாவிடம் ஐந்தாம் தலைமுறை போர்விமானங்கள் பல உள்ளன. ஜே20 போன்ற சிறப்பான விமானப்படை விமானங்களை அவர்கள் கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்களால் ரபேலின் அருகில் கூட தரத்திலும், செயலிலும் நெருங்கக் கூட முடியாது. அது தான், இந்த ரபேலின் சிறப்பே.

இந்த ரபேல் விமானம், சீனாவின் போர் விமானங்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த விமானத்தினை, தரையில் தாக்குவது மட்டுமே சாத்தியம். அதிலும், தற்பொழுது இந்தியா வாங்கியுள்ள விமானத்தில், அதனை தடுக்கும் ஆயுதங்களும் உள்ளன. எனவே, இது எதிரிகளுக்கு மிகப் பெரிய சிம்ம சொப்பணமாக இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS