பாலியல் வழக்கில் சுவாமி சின்மயானந்தாவிற்கு ஜாமீன் கிடைத்தது!

04 February 2020 அரசியல்
chinmayanand1.jpg

உத்திரப்பிரதேச மாநிலம், கல்லூரி மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக, பாஜக முன்னாள் உறுப்பினரும், சாமியாருமான சாமி சின்மயானந்தா கைது செய்யப்பட்டு இருந்தார்.

அவருக்குத் தற்பொழுது, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கடந்த சில மாதங்களாக, சிறையில் இருந்து வந்தார் சின்மயானந்தா. அவர் தன்னுடைய கல்வி நிறுவனங்களில் படித்து வந்த, மாணவியை தன்னுடைய ஆசைக்கு இணங்க அழைத்ததாகவும், அந்தப் பெண்ணும் வேறு வழியின்றி சென்றதாகவும், அதனை வீடியோ எடுத்து அந்த பெண் நீதிமன்றத்தில் அளித்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும், தன்னைத் தொடர்ந்து, சின்மயானந்தா மிரட்டுவதாகவும், இந்த வழக்கினை வாபஸ் பெறாவிட்டால், என்னைக் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டுகின்றார் என, அப்பெண் வழக்குத் தொடர்ந்தார். முதலில், அவருடைய வழக்கினை போலீசார் ஏற்கவில்லை. என்னுடைய வழக்கினை போலீசார் ஏற்கவில்லை எனவே, நான் தற்கொலை செய்துகொள்வேன் என அப்பெண் கூறினார். இதனையடுத்து, அவருடைய வழக்கானது போலீசாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், சின்மயானந்தா தரப்பின் படி, அந்தப் பெண் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதனால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அவருடைய அலுவலகம், கல்வி நிறுவனங்கள், ஹாஸ்டல்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். பின்னர், சின்மயானந்தாவினை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தரப்பில், ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

HOT NEWS