தமிழக டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கான தேர்தல், விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதா ரவி போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ராம ராஜ்யம் என்ற அணியின் சார்பில், தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுகின்றார்.
இருப்பினும், அவர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால், அவரை உள்ளே செல்ல யாரும் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து, அங்கிருந்த காவலர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி, சின்மயியை உள்ளே செல்ல அனுமதித்தனர். பின்னர், தன்னுடைய வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
அவர் வாழ்நாள் உறுப்பினருக்கான அடையாள அட்டையை வைத்திருப்பதாகவும், ஏன் என்னை சங்கத்தில் இருந்து நீக்கினார்கள் எனத் தெரியவில்லை எனவும், கண்டிப்பாக தேர்தலில் வெல்வேன் எனவும், சின்மயி தெரிவித்துள்ளார்.