அபுதாபிக்கு தற்பொழுது சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா மருந்தானது, விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸிற்கு தற்பொழுது பல நாடுகள் மருந்து கண்டுபிடித்து உள்ளன. இதில் சீனாவின் சீனோபார்ம் என்ற மருந்தும் ஒன்று. இந்த மருந்தினை ஆய்வு செய்த அமீரக அரசு, அதற்கு தற்பொழுது முழுமையாக அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்தினை அமீரகத்திற்குக் கொண்டு செல்லும் பணியானது தற்பொழுது தான் முடிவடைந்து உள்ளது. அதன்படி, இந்த மருந்தினைக் கொண்டு செல்வதற்கு விமானத்தினை பயன்படுத்த முடிவு செய்தனர்.
இந்த மருந்தினை எடுத்துச் செல்லும் விமானத்தில், பிரத்யேக குளிரூட்டப்பட்ட வசதிகள் செய்யப்பட்டன. பின்னர் அந்த விமானமானது 20 லட்சம் டோஸ் மருந்துகளுடன், அபுதாபியில் உள்ள எட்டிஹட் விமான நிலையத்திற்கு சென்று உள்ளது. இந்த மருந்தினை தற்பொழுது அபுதாபியில் உள்ளவர்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.