சன் டிவியின் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது, சித்தி நாடகம். இந்த சீரியலைப் பற்றித் தெரியாத தமிழர்கள் இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்குப் பிரபலமானதாக ஒரு காலத்தில் இருந்தது. இதனை மீண்டும் தயாரிக்க உள்ளது ராடான் நிறுவனம்.
இது குறித்த, முக்கியத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சித்தி 2 நாடகத்தில், ராதிகா சரத்குமாரே, சித்தியாக நடிக்கின்றார். டேனியல் பாலாஜி, பொன் வண்ணன், பாக்யராஜ் உட்பட பலப் பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், இந்த நாடகத்திற்கு, இசையமைப்பாளர் தீனா இசையமைக்கின்றார்.
இதன் சூட்டிங், தமிழ்நாட்டின் பலப் பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் பார்ட் 2 படம் வந்தாலே ஓடாது. சித்தி 2 எப்படி?