சித்திரை திருவிழா! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது!

18 April 2020 அரசியல்
meenakshichokkanathar.jpg

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவானது ரத்து செய்யப்பட்டு உள்ளது என, மதுரை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதனால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக, மீனாட்சி அம்மன் கோயிலின் துணைக் கமிஷனர் நடராஜன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன்படி, இந்த ஆண்டு திட்டமிடப்பட்டு இருந்த, சித்திரைத் திருவிழாவானது நடைபெறாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. திருவிழா கொடியேற்றம், உற்சவங்கள், திருவீதி உலா, பட்டாபிஷேகம், திக்விஜயம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறாது என்றுக் கூறப்பட்டு உள்ளது.

ஆனால், சாஸ்திரப்படி, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே மாதம் 4ம் தேதி அன்று, சுவாமி சன்னதியில் உள்ள முதல் பிரகாரத்தில் நடைபெறும் எனவும், அதில் நான்கு சிவாச்சாரியர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதில், பக்தர்கள் கலந்து முடியாது எனவும் கூறப்பட்டு உள்ளது.

வருகின்ற ஏப்ரல் 25ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் இந்தத் திருவிழாவானது தொடங்க இருந்தது. அதனைத் தொடர்ந்து, மே-2ம் தேதி பட்டாபிஷேகமும், 3ம் தேதி திக்விஜயமும், 4-ம் தேதி அன்று திருக்கல்யாண உற்சவமும், 5ம் தேதி அன்று தேரோட்டமும் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல், இந்தத் திருவிழாவினைத் தொடர்ந்து மே-6ம் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், 7ம் தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், தற்பொழுது கள்ளழகர் உற்சவம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

HOT NEWS