சியான் விக்ரம் நடிக்கும் 58வது படத்தின், அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் தற்பொழுது கடாரம் கொண்டான் திரைப்படத்தில், பிஸியாக உள்ளார். இத்திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிக்கும் சியான் விக்ரம் 58 வது படத்தில், இசையமைப்பாளராக, இசைப்புயல் ஏஆர் ரகுமான் இணைந்துள்ளார்.
இச்செய்தியை, இப்படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து, தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும், இத்திரைப்படம் அடுத்த வருடம் 2020ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வெளியாகும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
படத்தில் நடிக்கும் பிற நடிகர் மற்றும் நடிகைகள் பற்றியத் தகவலை இன்னும் வெளியிடவில்லை. விரைவில் இப்படத்தின் படக்குழுவினர் பற்றியத் தகவல், வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.