சினிமா, சின்னத்திறை போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி!

08 May 2020 சினிமா
edappadipalaniswami.jpg

இன்று சினிமா மற்றும் சின்னத்திரை போஸ்ட் புரொடக்சனுக்கான அனுமதியினை, தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்கான அரசாணை தற்பொழுது வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால், கடந்த 50 நாட்களாக எந்த பணியும் செய்ய இயலாததால், பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளதால், இத்தருணத்தில் தயாரிப்புக்குப் பிந்தைய POST PRODUCTION பணிகளை செய்வதற்காக மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

மேற்கண்ட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கணிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கீழ்கண்ட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை மட்டும், 11.05.2020 முதல் மேற்கொள்ள அனுமதித்துள்ளார். படத்தொகுப்பு பணியில் 5 பேர், குரல் பதிவு 5 பேர், விஎப்எக்ஸ், சிஜிஐ வேலையில் 10 முதல் 15 பேர், டிஐ பிரிவில் 5 பேர், பின்னணி இசையில் 5 பேர், ஒலிக்கலைப் பணியில் 5 பேர் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எனவே, POST PRODUCTION பணிகளை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு பெற்று தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS