கடல் மட்டம் உயர்வால், 20 கோடி பேருக்கு அபாயம்!

24 May 2019 டெக்னாலஜி
climate-change.jpg

நாளுக்கு நாள் வெயில் மட்டுமல்ல, நாளுக்கு நாள் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது, காடுகளை அழிப்பதும, நகரமயமாக்கலும் என, இதனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது அதிர்ச்சி தரும் ஒரு ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, 2050ம் ஆண்டு, உலகில் உள்ள முக்கியப் பெருநகரங்கள் கடலுக்குள் சென்று விடும் என எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்தின் லண்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஜப்பானின் முக்கிய நகரங்கள், இந்தியாவில், மும்பை, சென்னை போன்ற நகரங்கள் கடல் மட்ட உயர்வால், பாதிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கின்றனர்.

தொடர்ந்து, நாம் அதிக அளவில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதாலும், மரங்களை அதிகமாக வெட்டிவிட்டதாலும் இத்தகைய அழிவு ஏற்பட உள்ளதாக, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மேலும், உலகம் முழுவதும் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பிரச்சனையால், இடம்பெயர்தல், நோயால் பாதிக்கப்படுதல் மற்றும் மரணம் ஆகியவற்றை சந்திக்க உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.

வருமுன் காப்பதே நன்று என, தமிழில் ஒரு பழமொழி உள்ளது. ஆனால், நாம் அதைத் தாண்டி விட்டோம். பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது கூட நமக்கு அவகாசம் உள்ளது. நாம் வரும் பிரச்சனையை உணர்ந்து செயல்பட்டால், வரும் தலைமுறை வளமுள்ள தலைமுறையாக வாழும், இல்லையென்றால்……!

HOT NEWS