கோயம்பேட்டில் கொரோனா! இரத்த மாதிரிகள் சேகரிப்பு!

28 April 2020 அரசியல்
koyambedu.jpg

கோயம்பேடு காய்கறி சந்தையில் வேலை செய்த நான்கு பேருக்கு, கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் முழு ஊரடங்கானது பின்பற்றப்படுகின்றது. சென்னை கோயம்பேடு சந்தையில், மார்க்கெட் செயல்பட கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டது. அப்பொழுது, லட்சக்கணக்கான மக்கள், அலைகடலென வந்து காய்கறி உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர்.

அங்கு மொத்தம், 4000 கடைகள் உள்ளன. அவைகளில், பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே, அங்கு வேலை செய்த இரண்டு பேருக்கு, கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி இருந்தது. இந்நிலையில், தற்பொழுது கூடுதலாக நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் பழகியவர்கள், அவர்களிடம் காய்கறி வாங்கியவர்களுக்கு, இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் உண்டாகி உள்ளது.

இதனால், அந்த சந்தையில் தற்பொழுது இரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியானது, தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

HOT NEWS