கொரோனா மருத்துவமனைகள் நிரம்பின! கல்லூரிகளுக்கு நோயாளிகள் மாற்றம்!

04 May 2020 அரசியல்
coronaeps.jpg

சென்னையில், கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் அதிகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த வாரம், கோயம்பேடு மார்க்கெட்டில், பொதுமக்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்காத காரணத்தால், இவ்வளவு பெரிய சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. சென்னையில் நேற்று மட்டும், சுமார் 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையானது, 2757 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூர் அரசு மருத்துவமனை, உள்ளிட்டவைகளில், இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டன. இவை அனைத்துமே, தற்பொழுது நிரம்பி விட்டன. அனைத்து, வார்டுகளும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அதிக இடம் தேவைப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு புதிய நடவடிக்கையினை எடுத்துள்ளது.

அதன்படி, தற்பொழுது இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், 50,000 படுக்கை அறைகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவைகளை கையகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. மேலும், சித்த மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள 750 திருமண மண்டபங்கள் என அனைத்திலும், சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

முதலில் 10,000 படுக்கைகளும், பின்னர் படிப்படியாக 50,000 படுக்கை அறைகளும் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. சென்னையில் இந்த அளவிற்கு வைரஸ் பரவக் காரணமாக இருந்த இடம் என்றால், அது கோயம்பேடு மார்கெட் தான்.

HOT NEWS